குறள் 897

பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

vakaimaanda vaalkkaiyum vaanporulum yennaam
thakaimaanda thakkaar serin


Shuddhananda Bharati

Offend not the great

If holy mighty sages frown
Stately gifts and stores who can own?


GU Pope

Not Offending the Great

Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?

If aking incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?


Mu. Varadarajan

தகுதியால்‌ சிறப்புற்ற பெரியார்‌ ஒருவனை வெகுண்டால்‌ அவனுக்குப்‌ பலவகையால்‌ மாண்புற்ற வாழ்க்கையும்‌ பெரும்‌ பொருளும்‌ இருந்தும்‌ என்ன பயன்‌?


Parimelalagar

தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்?
விளக்கம்:
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொரு ளும் என்ன பயனுடையனவாம்; பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவா ராயின்,
(என்றவாறு). எல்லாவகையுமாவன - சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.