குறள் 896

பெரியாரைப் பிழையாமை

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

yeriyaal sudappatinum uivuntaam uiyaar
paeriyaarp pilaiththoluku vaar


Shuddhananda Bharati

Offend not the great

One can escape in fire caught
The great who offends escapes not.


GU Pope

Not Offending the Great

Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence.

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).


Mu. Varadarajan

தீயால்‌ சுடப்பட்டாலும்‌ ஒருகால்‌ உயிர்பிழைத்து வாழ முடியும்‌; ஆற்றல்‌ மிகுந்த பெரியாரிடத்தில்‌ தவறு செய்து நடப்பவர்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.


Parimelalagar

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.
விளக்கம்:
(தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையை உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின்; (குறள் -6) அது கூடாதாகலான், அதற்கு ஏழுவாய பிழை செய்யற்க என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரியாரைப் பிழைத் தொழுகுவார் உய்யார்,
(என்றவாறு). இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட்ட உயிர்க் கேடு வருமென்று கூறினார்.