குறள் 895

பெரியாரைப் பிழையாமை

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

yaanduchsenru yaandum ularaakaar vaendhthuppin
vaendhthu serappat davar


Shuddhananda Bharati

Offend not the great

Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?


GU Pope

Not Offending the Great

Who dare the fiery wrath of monarchs dread,
Where'er they flee, are numbered with the dead.

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.


Mu. Varadarajan

மிக்க வலிமை உடைய அரசனால்‌ வெகுளப்பட்டவர்‌, அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும்‌ எங்கும்‌ வாழ முடியாது.


Parimelalagar

வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.
விளக்கம்:
(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங் கொடுப்பாரில்லை; உளராயின், இவர் இனி ஆகார் என்பது நோக்கி அவனோடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர்; அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்; வெய்ய வலியையுடைய வேந்தனால் செறப்பட்டார், (எ - று ). இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.