Kural 894
குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்
kootrraththaik kaiyaal viliththatrraal aatrruvaarkku
aatrraathaar innaa seyal
Shuddhananda Bharati
The weak who insult men of might
Death with their own hands invite.
GU Pope
When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
Mu. Varadarajan
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தால், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
Parimelalagar
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்-மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கை காட்டி அழைத்தால் ஒக்கும்.
விளக்கம்:
(கையால் விளித்தல் - இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர் முதலிய கோடற்கு உரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக் கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற்போலும்,
(என்றவாறு)