Kural 893
குறள் 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
kedalvaentin kaelaathu seika adalvaentin
aatrru pavarkan ilukku
Shuddhananda Bharati
Heed not and do, if ruin you want
Offence against the mighty great.
GU Pope
Who ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might.
If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
Mu. Varadarajan
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.
Parimelalagar
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.
விளக்கம்:
(அப்பெரியாரைக் ''காலனும் காலம் பார்க்கும் பாராது - வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்''
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.
விளக்கம்:
(புறநா. 41) என்றார் பிறரும். நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.) --
Manakkudavar
(இதன் பொருள்) தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க, தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க,
(என்றவாறு).