குறள் 892

பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

paeriyaaraip paenaathu olukitr paeriyaaraal
paeraa idumpai tharum


Shuddhananda Bharati

Offend not the great

To walk unmindful of the great
Shall great troubles ceaseless create.


GU Pope

Not Offending the Great

If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.


Mu. Varadarajan

ஆற்றல்‌ மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல்‌ நடந்தால்‌, அது அப்‌ பெரியாரால்‌ நீங்காத துன்பத்தைத்‌ தருவதாகும்‌.


Parimelalagar

பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவனுக்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
விளக்கம்:
(அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம். அவையெல்லாம் தாமே செய்து கொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)


Manakkudavar

(இதன் பொருள்) பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின், அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்,
(என்றவாறு) இது முனிவரைப் போற்றா தொழியின், அது குற்றம் பயக்குமென்றது.