குறள் 88

விருந்தோம்பல்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

parindhthompip patrratrraem yenpar virundhthompi
vaelvi thalaippataa thaar


Shuddhananda Bharati

Hospitality

Who loathe guest-service one day cry:
"We toil and store; but life is dry".


GU Pope

Cherishing Guests

With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply.

Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."


Mu. Varadarajan

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில்‌ ஈடுபடாதவர்‌, பொருள்களை வருந்திக்‌ காத்து (பின்பு இழந்து) பற்றுக்‌ கோடு இழந்தோமே என்று இரங்குவர்‌.


Parimelalagar

பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
விளக்கம்:
("ஈட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்" (நாலடி. 280) ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)


Manakkudavar

(இதன் பொருள்) விருந்தினரைப் போற்றி யுபசரிக்க மாட்டாதார், வருந்தி யுடம் பொன்றையும் ஒப்பிப் பொருளற்றோமென் றிரப்பர்,
(என்றவாறு)