குறள் 870

பகைமாட்சி

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

kallaan vaekuluchiiruporul yenjgnyaanrum ollaanai
ollaanai ollaa tholi


Shuddhananda Bharati

Noble hostility

Glory's light he will not gain
Who fails to fight a fool and win.


GU Pope

The Might of Hatred

The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).


Mu. Varadarajan

கல்வி கற்காதவனைப்‌ பகைத்துக்‌ கொள்ளும்‌ எளிய செயலைச்‌ செய்ய இயலாத ஒருவனிடம்‌, எக்காலத்திலும்‌ புகழ்‌ வந்து பொருந்தாது.


Parimelalagar

கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை-நீதி நூலைக் கல்லாதானோட பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-எஞ்ஞான்றும் புகழ் மேவாது.
விளக்கம்:
(சிறு பொருள்-முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய், சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லா நாளும் ஒளி பொருந்தாது,
(என்றவாறு).