குறள் 868

பகைமாட்சி

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து

kunanilanaaik kutrram palavaayin maatrraarkku
inanilanaam yaemaap putaiththu


Shuddhananda Bharati

Noble hostility

With no virtue but full of vice
He loses friends and delights foes.


GU Pope

The Might of Hatred

No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim.

He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.


Mu. Varadarajan

ஒருவன்‌ குணம்‌ இல்லாதவனாய்க்‌ குற்றம்‌ பல உடையவனானால்‌, அவன்‌ துணை இல்லாதவன்‌ ஆவான்‌; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்‌.


Parimelalagar

குணன் இலனாயக் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல்தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து.
விளக்கம்:
(குணம் - இளைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும். துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின், அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்,
(என்றவாறு).