குறள் 867

பகைமாட்சி

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

koduththum kolalvaendum manra aduththirundhthu
maanaatha seivaan pakai


Shuddhananda Bharati

Noble hostility

Pay and buy his enmity
Who muddles chance with oddity.


GU Pope

The Might of Hatred

Unseenmly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy!

It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).


Mu. Varadarajan

தன்னை அடுத்துத்‌ தன்னோடிருந்தும்‌ பொருந்தாதவற்றைச்‌ செய்பவனுடைய பகையைப்‌ பொருள்‌ கொடுத்தாவது கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும. சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும்.
விளக்கம்:
(ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின. அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பகையை உற்றிருந்தும் மாட்சிமையில்லாதன செய்யுமவன் பகை யினை, துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்,
(என்றவாறு). மாணாத செய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால், அப்பகை கோடலாமென்றது.