குறள் 866

பகைமாட்சி

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

kaanaachiinaththaan kalipaerung kaamaththaan paenaamai
paenaamai paenap padum


Shuddhananda Bharati

Noble hostility

Blind in rage and mad in lust
To have his hatred is but just.


GU Pope

The Might of Hatred

Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.


Mu. Varadarajan

ஒருவன்‌ உண்மை காணாத சினம்‌ உடையவனாய்‌, மிகப்‌ பெரிய ஆசை உடையவனாய்‌ இருந்தால்‌, அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்‌.


Parimelalagar

காணாச் சினத்தான் - தன்மையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.
விளக்கம்:
(காணாதசினம் என்பது விகாரமாயிற்று. முன்னேனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப் பெருகிய காமத்தனுமாகிய வன் பகை, விரும்பப்படும்,
(என்றவாறு). இஃது இவையுடையார் நட்டோரிலராதலால், இவரிடத்துப் பகை கொள் ளலா மென்றது.