குறள் 864

பகைமாட்சி

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

neengkaan vaekuli niraiyilan yenjgnyaanrum
yaangkanum yaarkkum yelithu


Shuddhananda Bharati

Noble hostility

The wrathful restive man is prey
To any, anywhere any day.


GU Pope

The Might of Hatred

His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.


Mu. Varadarajan

ஒருவன்‌ சினம்‌ நீங்காதவனாய்‌, நெஞ்சத்தை நிறுத்தியாளும்‌ தன்மை இல்லாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ எக்காலத்திலும்‌ எவ்விடத்திலும்‌ எவர்க்கும்‌ எளியவன்‌.


Parimelalagar

வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன்அல்லன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன் மேற் சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.
விளக்கம்:
(நிறை - மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும் மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) வெகுளியின் நின்று நீங்கானாய், நிறையுடைமை யிலனாயினவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது,
(என்றவாறு). இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்குமென்றது.