குறள் 863

பகைமாட்சி

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

anjsum ariyaan amaivilan eekalaan
thanjcham yeliyan pakaikku


Shuddhananda Bharati

Noble hostility

Unskilled, timid, miser, misfit
He is easy for foes to hit.


GU Pope

The Might of Hatred

A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.


Mu. Varadarajan

ஒருவன்‌ அஞ்சுகின்றவனாய்‌, அறிவு இல்லாதவனாய்‌, பொருந்தும்‌ பண்பு இல்லாதவனாய்‌, பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ பகைவர்க்கு மிக எளியவன்‌.


Parimelalagar

அஞ்சும் - ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்.
விளக்கம்:
('தஞ்சம்', 'எளியன்' ஒரு பொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மத்தியிலன், ஈயமாட்டான்; இப்பெற்றிப்பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்,
(என்றவாறு). இஃது இவை நான்கு முடையவன் தோற்கும் மென்றது.