குறள் 862

பகைமாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

anpilan aanra thunaiyilan thaanthuvvaan
yenpariyum yaethilaan thuppu


Shuddhananda Bharati

Noble hostility

Loveless, aidless, powerless king
Can he withstand an enemy strong?


GU Pope

The Might of Hatred

No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome themight of his foe ?


Mu. Varadarajan

ஒருவன்‌ அன்புஇல்லாதவனாய்‌, அமைந்த துணை இல்லாதவனாய்‌, தானும்‌ வலிமை இல்லாதவனாய்‌ இருந்தால்‌, அவன்‌ பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்‌?


Parimelalagar

அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன், ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்?
விளக்கம்:
(சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலிவளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)


Manakkudavar

(இதன் பொருள்) சுற்றத்தார் மாட்டு அன்புறுத்தலும் இலன், வேற்றரசாகிய வலிய துணையும் இலன்; ஆதலான், தான் வலியிலன்; இப் பெற்றிப்பட்டவன் மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?
(என்றவாறு).