Kural 861
குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
valiyaarkku maaraetrral oampuka oampaa
maeliyaarmael maeka pakai
Shuddhananda Bharati
Turn from strife with foes too strong
With the feeble for battle long.
GU Pope
With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
Mu. Varadarajan
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
Parimelalagar
வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
விளக்கம்:
('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
Manakkudavar
பகை மாட்சியாவது பகை கொள்ளுங்கால் தனக்கு நன்மை பயக்குமாறு கொள்ளுதல். மேல் பகை கொள்ளலாகாதென்றார் பகைகொள்ளுங்கால் நன்மை பயக்குமாயின் கொள்கவென்றமையால், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக,
(என்றவாறு). இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.