Kural 860
குறள் 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
ikalaanaam innaatha yellaam nakalaanaam
nannayam yennum serukku
Shuddhananda Bharati
All evils come from enmity
All goodness flow from amity.
GU Pope
From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.
All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
Mu. Varadarajan
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
Parimelalagar
இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு- மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
விளக்கம்:
(இன்னாதன - வறுமை, பழி, பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம் ; உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய வுள்ளக்களிப்பு உண்டாம்,
(என்றவாறு).