குறள் 86

விருந்தோம்பல்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு

selvirundhthu oampi varuvirundhthu paarththiruppaan
nalvarundhthu vaanath thavarkku


Shuddhananda Bharati

Hospitality

Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.


GU Pope

Cherishing Guests

The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.


Mu. Varadarajan

வந்த விருந்தினரைப்‌ போற்றி, இனி வரும்‌ விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன்‌, வானுலகத்தில்‌ உள்ள தேவர்க்கும்‌ நல்ல விருந்தினனாவான்‌.


Parimelalagar

செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
விளக்கம்:
('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன்,
(என்றவாறு) வரவு பார்த்தல் - விருந்தின்றி யுண்ணாமை.