Kural 85
குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
viththum idalvaendum kollo virundhthompi
michil misaivaan pulam
Shuddhananda Bharati
Should his field be sown who first
Feeds the guests and eats the rest?
GU Pope
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?
Mu. Varadarajan
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
Parimelalagar
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.
விளக்கம்:
('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.