குறள் 84

விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

akanamarndhthu seiyaal uraiyum mukanamarndhthu
nalvirundhthu oampuvaan il


Shuddhananda Bharati

Hospitality

The goddess of wealth will gladly rest
Where smiles welcome the worthy guest.


GU Pope

Cherishing Guests

With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.


Mu. Varadarajan

நல்ல விருந்தினராய்‌ வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில்‌ மனமகிழ்ந்து திருமகள்‌ வாழ்வாள்‌.


Parimelalagar

செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
விளக்கம்:
(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) திருவினாள் மனம் பொருந்தி உறையும்; நல்லவிருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்,
(என்றவாறு) இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.