குறள் 83

விருந்தோம்பல்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

varuvirundhthu vaikalum oampuvaan vaalkkai
paruvandhthu paalpaduthal inru


Shuddhananda Bharati

Hospitality

Who tends his guests day in and out
His life in want never wears out.


GU Pope

Cherishing Guests

Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.


Mu. Varadarajan

தன்னை நோக்கி வரும்‌ விருந்தினரை நாள்தோறும்‌ போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால்‌ வருந்திக்‌ கெட்டுப்‌ போவதில்லை.


Parimelalagar

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை.
விளக்கம்:
(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நாடோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்த முற்றுக் கேடுபடுவதில்லை ,
(என்றவாறு).