குறள் 840

பேதைமை

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

kalaaakkaal palliyul vaiththatrraal saannor
kulaaaththup paethai pukal


Shuddhananda Bharati

Folly

Entrance of fools where Savants meet
Looks like couch trod by unclean feet.


GU Pope

Folly

Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.

The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.


Mu. Varadarajan

சான்றோரின்‌ கூட்டத்தில்‌ பேதை புகுதல்‌, ஒருவன்‌ தூய்மையில்லாதவற்றை மிதித்துக்‌ கழுவாத காலைப்‌ படுக்கையில்‌ வைத்தாற்‌ போன்றது.


Parimelalagar

சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும அமளிக் கண்ணே வைத்தாற் போலும்.
விளக்கம்:
(கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கழுவாத காலைப் பள்ளியின் கண் வைத்தாற்போலும்; சான்றோர் அவையின் கண் பேதை புகுந்து கூடியிருத்தல்,
(என்றவாறு). இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.