குறள் 839

பேதைமை

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

paerithinithu paethaiyaar kaenmai pirivinkan
peelai tharuvathon ril


Shuddhananda Bharati

Folly

Friendship with fools is highly sweet
For without a groan we part.


GU Pope

Folly

Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.


Mu. Varadarajan

பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம்‌ ஒன்றும்‌ தருவதில்லை. ஆகையால்‌ பேதையருடன்‌ கொள்ளும்‌ நட்பு மிக இனியதாகும்‌.


Parimelalagar

பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது.
விளக்கம்:
(நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மகளிர்க்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது; பிரிந்தவிடத்து, தருவதொரு துன்பம் இல்லையாதலான்,
(என்றவாறு). இது பேதை காமந் துய்க்குமாறு கூறிற்று.