குறள் 841

புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

arivinmai inmaiyul inmai pirithinmai
inmaiyaa vaiyaa thulaku


Shuddhananda Bharati

Petty conceit

Want of wisdom is want of wants
Want of aught else the world nev'r counts.


GU Pope

Ignorance

Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.


Mu. Varadarajan

அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும்‌ கொடிய இல்லாமையாகும்‌; மற்ற இல்லாமைகளை உலகம்‌ அத்தகைய இல்லாமையாகக்‌ கருதாது.


Parimelalagar

இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை;பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப் பொருள் இல்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.
விளக்கம்:
(அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும், நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இம்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

புல்லறிவாண்மையாவது சிற்றறிவின் இயல்பும் அதனால் வருங் குற்றமும் கூறுதல். இதுவும் பேதைமையோடொத்த இயல்பிற்றாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை ; பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்; அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேரு மாதலான், (எ-று).