குறள் 842

புல்லறிவாண்மை

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

arivilaan naenjsuvandhthu eethal pirithiyaathum
illai paeruvaan thavam


Shuddhananda Bharati

Petty conceit

When fool bestows with glee a gift
It comes but by getter's merit.


GU Pope

Ignorance

The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).


Mu. Varadarajan

அறிவில்லாதவன்‌ மனம்‌ மகிழ்ந்து ஒரு பொருளைக்‌ கொடுத்தலுக்குக்‌ காரணம்‌, வேறொன்றும்‌ இல்லை; அந்தப்‌ பொருளைப்‌ பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்‌.


Parimelalagar

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே; வேறொன்றும் இல்லை.
விளக்கம்:
(ஒரோவழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இன்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன.இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவில்லாதான் மனங்குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன். இது கொடுத்தானாயினும் வரிசையறியாது கொடுக்குமாதலின், அது புல்லறி வென்றது.