குறள் 843

புல்லறிவாண்மை

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

arivilaar thaandhthammaip peelikkum peelai
seruvaarkkum seithal arithu


Shuddhananda Bharati

Petty conceit

The self-torments of fools exceed
Ev'n tortures of their foes indeed.


GU Pope

Ignorance

With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.


Mu. Varadarajan

அறிவில்லாதவர்‌ தம்மைத்‌ தாமே துன்புறுத்தும்‌ துன்பம்‌ அவருடைய பகைவர்க்கும்‌ செய்ய முடியாத அளவினதாகும்‌.


Parimelalagar

அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது.
விளக்கம்:
(பகைவர் தாம் அறிந்த தொன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும் எக்காலத்தும் செய்ய மாட்டாமையின், அவர்க்கும் செய்தல் அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல் அறிவர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகை வர்க்கும் செய்தல் அரிது,
(என்றவாறு). இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.