குறள் 844

புல்லறிவாண்மை

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

vaenmai yenappaduva thiyaathaenin onmai
utaiyamyaam yennum serukku


Shuddhananda Bharati

Petty conceit

Stupidity is vanity
That cries "We have sagacity"


GU Pope

Ignorance

What is stupidity? The arrogance that cries,
"Behold, we claim the glory of the wise.'

What is called want of wisdom is the vanity which says, "We are wise".


Mu. Varadarajan

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால்‌, யாம்‌ அறிவுடையேம்‌ என்று ஒருவன்‌ தன்னைத்தானே மதித்துக்‌ கொள்ளும்‌ செருக்காகும்‌.


Parimelalagar

'வெண்மை எனப்படுவது யாது?' எனின், 'ஒண்மை உடையம் யாம்!' என்னும் செருக்கு. வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம்.
விளக்கம்:
('வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற் காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிய வுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு,
(என்றவாறு)