குறள் 836

பேதைமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

poipadum onno punaipoonum kaiyariyaap
paethai vinaimaetr kolin


Shuddhananda Bharati

Folly

A know-nothing fool daring a deed
Not only fails but feels fettered.


GU Pope

Folly

When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.


Mu. Varadarajan

ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்‌ கொண்டால்‌ (அந்தச்‌ செயல்‌ முடிவுபெறாமல்‌) பொய்படும்‌; அன்றியும்‌ அவன்‌ குற்றவாளியாகித்‌ தளை பூணுவான்‌.


Parimelalagar

கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வாளுயின்; பொய்படும் ஒன்றோ புனை பூணும் - அதுவும் புரைபடும்; தானும் தளை பூணும்.
விளக்கம்:
(புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண் டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும்பட்டு, பிறர்க்குப் புனை பூணும். புனை பூணல் - சிறைபடுதல்.