Kural 831
குறள் 831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்
paethaimai yenpathonru yaathaenin yaethangkondu
oothiyam poka vidal
Shuddhananda Bharati
This is folly's prominent vein
To favour loss and forego gain.
GU Pope
What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
Mu. Varadarajan
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.
Parimelalagar
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.
விளக்கம்:
(கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள். தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
Manakkudavar
பேதைமையாவது கேட்டிற்குக் காரணமாகியவற்றை அறியாதாரியல்பு கூறுதல். இறைமாட்சி முதலாகக் கூடாநட்பு ஈறாகப் பொருட்பகுதியாகிய அமைச்சும், நாடும், அரணும், பொருளும், படையும், நட்பும் என்று சொல்லப் பட்ட ஆறு உறுப்புங் கூறினார். இனி அவ்வரசர்க்கும் அவராலாக்கப்பட்ட பொருட் கும் கேடுவரும் நெறியையறிந்து காக்குமாறு வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.