குறள் 830

கூடாநட்பு

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்

pakainatpaam kaalam varungkaal mukanatdu
akanatpu oreei vidal


Shuddhananda Bharati

False friendship

When foes, in time, play friendship's part
Feign love on face but not in heart.


GU Pope

Unreal Friendship

When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).


Mu. Varadarajan

பகைவர்‌ நண்பராகும்‌ காலம்‌ வரும்போது முகத்தளவில்‌ நட்புக்கொண்டு அகத்தில்‌ நட்பு நீங்கி வாய்ப்புக்‌ கிடைத்தபோது அதையும்‌ விடவேண்டும்‌.


Parimelalagar

பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க.
விளக்கம்:
(அக்காலமாவது, தம்மானும் பகையென்று வௌ¢ப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, 'ஆமளவெல்லாம் நீக்குக' என்பது பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பகைவர் நட்பாங்காலம் வந்துவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக,
(என்றவாறு).