குறள் 829

கூடாநட்பு

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று

mikachseithu thammaellu vaarai nakachseithu
natpinul saappullatr paatrru


Shuddhananda Bharati

False friendship

In open who praise, at heart despise
Cajole and crush them in friendly guise.


GU Pope

Unreal Friendship

'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shewthem great friendship but despise them (in their heart).


Mu. Varadarajan

புறத்தே மிகுதியாக நட்புத்‌ தோன்றச்‌ செய்து அகத்தில்‌ இகழ்கின்றவரைத்‌, தாமும்‌ அந்‌ நட்பில்‌ நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்‌.


Parimelalagar

மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச் செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி
விளக்கம்:
('நின்று' என்பதூஉம், 'அரச நீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார், அதன்மேல் வைத்துக் கூறினார் 'சாவ' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது ''கோட்டின்வாய்ச் சாக்குத்தி'' (கலித்: முல்லை. 5) என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.)


Manakkudavar

(இதன் பொருள்) பகைமை தோன்றாமல் புறத்தின் கண் நட்பினை மிகச் செய்து, அகத்தின்கண் தம்மையிகழும் பகவரை, தாமும் அந்நட்பின்கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி,
(என்றவாறு).