குறள் 828

கூடாநட்பு

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து

tholuthakai yullum pataiyodungkum onnaar
aluthakan neerum anaiththu


Shuddhananda Bharati

False friendship

Adoring hands of foes hide arms
Their sobbing tears have lurking harms.


GU Pope

Unreal Friendship

In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they she dare of the same nature.


Mu. Varadarajan

பகைவர்‌ வணங்கித்‌ தொழுத கையினுள்ளும்‌ கொலைக்‌ கருவி மறைந்திருக்கும்‌; பகைவர்‌ அழுது சொரிந்த கண்ணீரும்‌ அத்தன்மையானதே.


Parimelalagar

ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம்.
விளக்கம்:
(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார், 'ஒடுங்கும்' என்பார். பவைர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும் அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¢யற்க' என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும் ; பகைவர் அழுதகண்ணிரும் அத்தன்மையதாமென்று கொள்க,
(என்றவாறு) மெல்லியராகத் தொழுது வந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்ற வாறு. இது கூடாநட்பினால் வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுத காலத்தினும் தேறப்படாரென்க.