குறள் 820

தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

yenaiththum kurukuthal oampal manaikkeleei
manril palippaar thodarpu


Shuddhananda Bharati

Bad friendship

Keep aloof from those that smile
At home and in public revile.


GU Pope

Evil Friendship

In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you inprivate but ridicule you in public.


Mu. Varadarajan

தனியே வீட்டில்‌ உள்ளபோது பொருந்தியிருந்து, பலர்‌ கூடிய மன்றத்தில்‌ பழித்துப்‌ பேசுவோரின்‌ நட்பை எவ்வளவு சிறிய அளவிலும்‌ அணுகாமல்‌ விடவேண்டும்‌.


Parimelalagar

மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின் கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க
விளக்கம்:
(மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்)மனையின் கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றங் கூறுவா ரது நட்பை , சிறிதும் செறிதலைத் தவிர்க,
(என்றவாறு). இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.