Kural 818
குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
ollum karumam udatrru pavarkaenmai
sollaataar chora vidal
Shuddhananda Bharati
Without a word those friends eschew
Who spoil deeds which they can do.
GU Pope
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability tocarry out what they (really) could do.
Mu. Varadarajan
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
Parimelalagar
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாதாகச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக.
விளக்கம்:
(முடியாதாகுதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒரு கால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார். நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது..)
Manakkudavar
(இதன் பொருள்) தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை , நட் பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக,
(என்றவாறு). இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.