குறள் 817

தீ நட்பு

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

nakaivakaiya raakiya natpin pakaivaraal
paththaduththa koati urum


Shuddhananda Bharati

Bad friendship

Ten-fold crore you gain from foes
Than from friends who are vain laughers.


GU Pope

Evil Friendship

From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.

What comes from enemies is a hundred million times more profitable than what comes from thefriendship of those who cause only laughter.


Mu. Varadarajan

(அகத்தில்‌ அன்பு இல்லாமல்‌ புறத்தில்‌) நகைக்கும்‌ தன்மை உடையவரின்‌ நட்பைவிட, பகைவரால்‌ வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்‌.


Parimelalagar

நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக் கோடி மடங்கு நல்ல.
விளக்கம்:
(நட்பு: ஆகு பெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்..)


Manakkudavar

(இதன் பொருள்) நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக் கோடி மடங்கு நன்மை மிகும்,
(என்றவாறு). நகைவகையர் - காமுகர் - வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.