குறள் 816

தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

paethai paerungkeleei natpin arivutaiyaar
yaethinmai koati urum


Shuddhananda Bharati

Bad friendship

Million times the wise man's hate
Is better than a fool intimate.


GU Pope

Evil Friendship

Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.


Mu. Varadarajan

அறிவில்லாதவனுடைய மிகப்‌ பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்‌ நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்‌.


Parimelalagar

பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்- அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
விளக்கம்:
('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்..)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிய வுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும்,
(என்றவாறு). இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.