குறள் 815

தீ நட்பு

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

seithaemanj saaraachiiriyavar punkaenmai yeithalin
yeithalin yeithaamai nanru


Shuddhananda Bharati

Bad friendship

Friends low and mean that give no help-
Leave them is better than to keep.


GU Pope

Evil Friendship

'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.

It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (theirfriends) even when appointed to do so.


Mu. Varadarajan

காவல்‌ செய்து வைத்தாலும்‌ காவல்‌ ஆகாத கீழ்மக்களின்‌ தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்‌.


Parimelalagar

செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
விளக்கம்:
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் 'கேண்மை' என்னும் பெயர் கொண்டது; 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்) நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதிலும், பெறாமை நன்று,
(என்றவாறு). இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார் - சூதர், வேட்டைக் காரர், பெண்டிர் போல்வார்.