Kural 812
குறள் 812
உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
urinnatdu arinoruum oppilaar kaenmai
paerinum ilappinum yen
Shuddhananda Bharati
Who fawn in wealth and fail in dearth
Gain or lose; such friends have no worth.
GU Pope
What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave whenthere is none ?
Mu. Varadarajan
தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?
Parimelalagar
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது?
விளக்கம்:
(தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு, அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்தத னால் வரும் தீமை யாது?
(என்றவாறு). மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான், ஒப்பிலார் என் றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.