Kural 811
குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
parukuvaar polinum panpilaar kaenmai
paerukalitr kunral inithu
Shuddhananda Bharati
Swallowing love of soulless men
Had better wane than wax anon.
GU Pope
Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love)while they are really destitute of goodness is far better than its increase.
Mu. Varadarajan
அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது.
Parimelalagar
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று.
விளக்கம்:
('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர் 78) என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) --
Manakkudavar
தீநட்பாவது தீயகுணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வரும் குற்றங் கூறுதல். (இதன் பொருள்) கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையராயிருப் பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று,
(என்றவாறு). இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.