குறள் 81

விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

irundhthompi ilvaalva thaellaam virundhthompi
vaelaanmai seithatr porutdu


Shuddhananda Bharati

Hospitality

Men set up home, toil and earn
To tend the guests and do good turn.


GU Pope

Cherishing Guests

All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.


Mu. Varadarajan

வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌.


Parimelalagar

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்-மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
விளக்கம்:
(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.) --


Manakkudavar

விருந்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டுமென்பது கூறல். (இதன் பொருள்) இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம், வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக,
(என்றவாறு).