குறள் 80

அன்புடைமை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

anpin valiyathu uyirnilai akhthilaarkku
yenputhol porththa udampu


Shuddhananda Bharati

Loving

The seat of life is love alone;
Or beings are but skin and bone!


GU Pope

The Possession of Love

Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.


Mu. Varadarajan

அன்பின்‌ வழியில்‌ இயங்கும்‌ உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்‌; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத்‌ தோல்‌ போர்த்த வெற்றுடம்பே ஆகும்‌.


Parimelalagar

அன்பின் வழியது உயிர்நிலை-அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த-அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
விளக்கம்:
(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பு இல்வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் . வரும்; ஆதலால், அவ் வன்பிலாதார்க்கு உளதாவது என்பின்மேற் றோலினாற் போர்க்கப்பட்ட வுடம்பு,
(என்றவாறு) இது வீடு பெறாரென்றது.