குறள் 79

அன்புடைமை

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

puraththurup paellaam yevanseiyum yaakkai
akaththuruppu anpi lavarkku


Shuddhananda Bharati

Loving

Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.


GU Pope

The Possession of Love

Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.


Mu. Varadarajan

உடம்பின்‌ அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின்‌ புறத்து உறுப்புக்கள்‌ எல்லாம்‌ என்ன பயன்‌ செய்யும்‌?


Parimelalagar

யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு-யாக்கை யகத்தின்கண் நின்ற (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்!
விளக்கம்:
(புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின், 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. 'யாக்கையின் கண் முதலிய உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புக்க ளெல்லாம் யாதினைச் செய்யும்?
(என்றவாறு)