குறள் 78

அன்புடைமை

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

anpakath thillaa uyirvaalkkai vanpaatrkan
vatrral marandhthalirth thatrru


Shuddhananda Bharati

Loving

Life bereft of love is gloom
Can sapless tree in desert bloom?


GU Pope

The Possession of Love

The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.


Mu. Varadarajan

அகத்தில்‌ அன்பு இல்லாமல்‌ வாழும்‌ உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில்‌ பட்டமரம்‌ தளிர்த்தாற்‌ போன்றது.


Parimelalagar

அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை-மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று-வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
விளக்கம்:
(கூடாது என்பதாம். வன்பால்-வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறினைப் படர்க்கைப் பெயர்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னிடத்து அன்பில்லாத வுயிரினது வாழ்க்கை , வலியபாரிடத்து உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்,
(என்றவாறு). தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.