குறள் 77

அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

yenpi lathanai vaeyilpolak kaayumae
anpi lathanai aram


Shuddhananda Bharati

Loving

Justice burns the loveless form
Like solar blaze the boneless worm.


GU Pope

The Possession of Love

As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.


Mu. Varadarajan

எலும்பு இல்லாத உடம்போடு வாழும்‌ புழுவை வெயில்‌ காய்ந்து வருத்துவதுபோல்‌, அன்பு இல்லாத உயிரை அறம்‌ வருத்தும்‌.


Parimelalagar

என்பு இலதனை வெயில் போலக் காயும்-என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம்-அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
விளக்கம்:
('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் 'காயும்' என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ''அல்லவை செய்தற்கு அறம் கூற்றம்''(நான்மணிக்.83) எனப் பிறரும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்பிலாத சீவனை வெயில் சுடு மாறு போற் சுடும்; அன்பிலாத வுயிரினை அறம்,
(என்றவாறு).