குறள் 76

அன்புடைமை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

araththitrkae anpusaar paenpa ariyaar
maraththitrkum akhthae thunai


Shuddhananda Bharati

Loving

"Love is virtue's friend" say know-nots
It helps us against evil plots.


GU Pope

The Possession of Love

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.


Mu. Varadarajan

அறியாதவர்‌, அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும்‌ என்று கூறுவர்‌; ஆராய்ந்து பார்த்தால்‌ வீரத்திற்கும்‌ அதுவே துணையாக நிற்கின்றது.


Parimelalagar

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார்-அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கம் அஃதே துணை-ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
விளக்கம்:
(ஒருவன் செய்த பகைமைப்பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்; 'துன்பத்திற்கு யாரே துணையாவார்' (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அன்பானது அறஞ்செய்வார்ககே சார்பாமென்பர் அறியாதார் ; அவ்வன்பு மறஞ் செய்வார்க்குத் துணையாம்,
(என்றவாறு)