Kural 809
குறள் 809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
ketaaa valivandhtha kaenmaiyaar kaenmai
vitaaar vilaiyum ulaku
Shuddhananda Bharati
To love such friends the world desires
Whose friendship has unbroken ties.
GU Pope
Friendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends.
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they havekept up an unbroken long-standing intimacy.
Mu. Varadarajan
உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
Parimelalagar
கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை, விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக் குறித்து விரும்பும்.
விளக்கம்:
('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி, 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்..)
Manakkudavar
(இதன் பொருள்) குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத் தின் வழி வந்த நட்புடையாரது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். 9