குறள் 808

பழைமை

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

kaelilukkam kaelaak keluthakaimai vallaarkku
naalilukkam nattaar seyin


Shuddhananda Bharati

Intimacy

Fast friends who list not tales of ill
Though wronged they say "that day is well".


GU Pope

Familiarity

In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.

To those who understand that by which they should not listen to (tales about) the faults of theirfriends, that is a (profitable) day on which the latter may commit a fault.


Mu. Varadarajan

பழகிய நண்பர்‌ செய்த தவறு பற்றிப்‌ பிறர்‌ சொன்னாலும்‌ கேளாமலிருக்கும்‌ உரிமை வல்லவர்க்கு, அந்‌ நண்பர்‌ தவறு செய்வாரானால்‌ அது பயனுள்ள நாளாகும்‌.


Parimelalagar

கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு, நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.
விளக்கம்:
(பிழையாவன: சொல்லாது நற்பொகுள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமை வல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்) நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச் செய்யின், அந்த நாள் நல்ல நாளாம், (எ-று) இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டும் மென்றது