Kural 807
குறள் 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
alivandhtha seiyinum anparaar anpin
valivandhtha kaenmai yavar
Shuddhananda Bharati
Comrades established in firm love
Though ruin comes waive not their vow.
GU Pope
True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause(them) their ruin.
Mu. Varadarajan
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பார்.
Parimelalagar
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்.
விளக்கம்:
('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது..)
Manakkudavar
(இதன் பொருள்) தமக்கு அழிவு வரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தா ராயினும், அவரோடு உள்ள அன்புவிடார் ; முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்,
(என்றவாறு). இது கேடுவருவன் செய்யினும் அமைய வேண்டு மென்றது.