குறள் 806

பழைமை

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

yellaikkan ninraar thuravaar tholaividaththum
thollaikkan ninraar thodarpu


Shuddhananda Bharati

Intimacy

They forsake not but continue
In friendship's bounds though loss ensue.


GU Pope

Familiarity

Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacyof long-standing friends.


Mu. Varadarajan

உரிமைவாழ்வின்‌ எல்லையில்‌ நின்றவர்‌, தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும்‌ பழைமையாய்‌ உறவுகொண்டு நின்றவரின்‌ தொடர்பைக்‌ கைவிடமாட்டார்‌.


Parimelalagar

எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார்.
விளக்கம்:
(பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.


Manakkudavar

(இதன் பொருள்) ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றா ரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார், (எ - று. எல்லை - வரம்பு.