குறள் 803

பழைமை

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

palakiya natpaevan seiyung keluthakaimai
seithaangku amaiyaak katai


Shuddhananda Bharati

Intimacy

Of long friendship what is the use
Righteous freedom if men refuse?


GU Pope

Familiarity

When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?

Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done throughthe right of intimacy ?


Mu. Varadarajan

பழகியவர்‌ உரிமைபற்றிச்‌ செய்யும்‌ செயலைத்‌ தாம்‌ செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால்‌ அவரோடு தாம்‌ பழகிய நட்பு என்ன பயன்‌ தரும்‌?


Parimelalagar

கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிக்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
விளக்கம்:
(செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் தனது உரிமையாலே இசைவில்லாதவற்றைச் செய்த விடத்து, தான் அமையானாயின், பின் அவனோடு பழகிய நட்பு யாதினைச் செய்யும்? இது மறுமையிற் பயன் படானென்றது.