Kural 804
குறள் 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
vilaithakaiyaan vaenti iruppar keluthakaiyaatr
kaelaathu nattaar seyin
Shuddhananda Bharati
Things done unasked by loving friends
Please the wise as familiar trends!
GU Pope
When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will bepleased with them on account of its desirability.
Mu. Varadarajan
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
Parimelalagar
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.
விளக்கம்:
(ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பது போல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது..)
Manakkudavar
(இதன் பொருள்) நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின், அதற்கு முனியாது அதனையுந் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார், (எ - று. இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.